சைக்கிள் பந்தயத்தில் உலக சாதனை படைத்த அவுஸ்திரேலிய அணி

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

காமன்வெல்த் சைக்கிள் பந்தயத்தின் இறுதிப்போட்டியில், அவுஸ்திரேலிய அணி உலக சாதனை படைத்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், ஆண்களுக்கான 4 கிலோ மீட்டர் தூர சைக்கிள் பந்தயத்தில் அவுஸ்திரேலிய அணி கலந்து கொண்டது.

இறுதிப் போட்டி வரை சென்ற அவுஸ்திரேலிய அணி, பந்தய தூரத்தை 3 நிமிடம் 49 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளது.

இதற்கு முன்பு, கடந்த 2016ஆம் ஆண்டில் ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், இங்கிலாந்து அணி 3 நிமிடம் 50 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்ததே சாதனையாக இருந்தது.

Ryan Pierse/Getty Images

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்