அடேங்கப்பா 6138 கோடியா?

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
206Shares

இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.6138.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமையை ஏலம் மூலம் நிறுவனங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்குகிறது.

தற்போது இந்திய அணி விளையாடும் போட்டிகளை ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒளிபரப்புகிறது.

ஸ்டார் இந்தியா நிறுவனத்துடன் இந்திய கிரிக்கெட் வாரியம் செய்துகொண்ட ஒப்பந்தம் முடிவடையவுள்ளது.

இதனையடுத்து அடுத்த ஐந்து ஆண்டுகள் 2018 - 2023 வரையிலான காலகட்டத்தில் நடைபெறவுள்ள போட்டிகளை ஒளிபரப்புவதற்கான ஏலத்தை பிசிசிஐ நடத்தியது.

இதற்கான ஸ்டார் இந்தியா, சோனி பிக்சர்ஸ், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பிசிசிஐ அழைப்புவிடுத்தது.

இதன் அடிப்படையில் ஏப்.3 ஆம் திகதி மும்பையில் இதற்கான ஏலத்தை பிசிசிஐ நடத்தியது. அடிப்படை தொகையாக ரூ.4176 கோடியை பிசிசிஐ நிர்ணயித்தது.

இதன்பின்னர் நிறுவனங்கள் தங்கள் ஏலத்தொகையை அறிவித்தன. முதல் நாள் முடிவில் ரூ.4442 கோடியில் ஏலம் நின்றது.

இரண்டாம் நாள் முடிவில் ரூ.5748 கோடியில் ஏலம் நின்றது. இன்று மூன்றாவது நாளாக நடைப்பெற்ற ஏலத்தில் இறுதியாக ரூ.6138.10 கோடிக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியுள்ளது.

இந்தத் தகவலை பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிசிசிஐ இந்தமுறை ஏலத்தை வெளிப்படையாக ஆன்லைன் மூலம் நடத்தியுள்ளது.

ஏலம் இந்தளவு உச்சத்தை தொட்டது இதுவே முதன்முறை. இதன்மூலம் ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒரு போட்டியை ஒளிபரப்ப ரூ 60.1கோடி கொடுத்துள்ளது.

2018 -2023 வரையிலான காலகட்டத்தில் இந்திய அணி 102 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை விளையாடவுள்ளது.

ஸ்டார் இந்தியா நிறுவனம் கடந்த 2012ல் ரூ.3851 கோடி ஏலம் எடுத்ததிருந்தது. அப்போது ஒரு போட்டிக்கு 43கோடி கொடுத்தது. மொத்தம் 98 போட்டிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்