பிரபல WWE மல்யுத்த வீரர் ஜானி வாலியண்ட் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளார்.
ஜானி தனக்கென மிகபெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த நிலையில் மல்யுத்த போட்டிகளில் பல்வேறு சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார்.
ஜானியின் சகோதரரான ஜிம்மி வாலியண்டும் மல்யுத்த வீரராவார்.
அவருடன் இணைந்து பல மல்யுத்த போட்டிகளில் பங்கேற்றுள்ள ஜானி இரண்டு முறை tag team சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் ஜானி அமெரிக்காவின் பென்சில்வானியா மாகாணத்தில் லொறி டிரக் மோதி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இது குறித்து WWE செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஜானி வாலியண்ட் இன்று காலை உயிரிழந்துவிட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
ஜானியின் மறைவுக்கு சக மல்யுத்த வீரர்கள் சமூகவலைதளங்களில் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளார்கள்.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்