தடை செய்யப்படுமா ஐபிஎல் போட்டிகள்: சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிக்குத் தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா வரும் ஏப்ரல் 7-ம் திகதி தொடங்கி மே 27-ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இந்தாண்டு தொடரில் பங்கேற்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐ.பி.எல் போட்டி தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இதை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், சூதாட்டத்தை முற்றிலும் தடை செய்யாமல் ஐ.பி.எல் போட்டிக்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும், 2013-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல் சூதாட்ட விவகாரத்தில் அணிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுதொடர்பாக பி.சி.சி.ஐ மற்றும் மத்திய அரசு வரும் 13-ம் திகதி பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியதோடு, வழக்கையும் 13-ம் திகதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்