இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளிடம் ஊக்கமருந்து சோதனை

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
105Shares

அவுஸ்திரேலியாவில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்க சென்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளிடம் ஊக்கமருந்து சோதனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்குகிறது. இதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள், கோல்டு கோஸ்ட் விளையாட்டு மைதானத்தில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், வீரர்கள் தங்கியிருந்த அறைக்கு வெளியே பயன்படுத்தப்பட்ட ஊசி கிடந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இந்திய குத்துச்சண்டை மற்றும் மல்யுத்த நட்சத்திரங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் 219 பேரிடமும் ஊக்கமருந்து சோதனை நடத்துவதற்காக, அவுஸ்திரேலிய ஊக்கமருந்து தடுப்பு சோதனை மையம் ஓய்வு எடுக்கக்கூட அனுமதிக்காமல் சிறுநீர் மாதிரியை அளிக்குமாறு கேட்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திய பயிற்சியாளர் ஒருவர் கூறுகையில், ‘இது வழக்கமான சோதனை தான் என்றாலும், களைப்புடன் வரும் நட்சத்திரங்களை சோதனை என்ற பெயரில் அலைக்கழிக்கின்றனர்.

யாரோ ஒருவர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த இந்தியர்களையும் சந்தேகத்துடன் பார்க்கின்றனர்’ என தெரிவித்துள்ளார்.

PTI

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்