இலங்கையில் பாடகராக மாறிய ரெய்னா: வைரல் வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
511Shares
511Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, இலங்கையில் பாடல் பாடி சக வீரர்களை மகிழ்விக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இலங்கையில் நிதாஹஸ் எனும் முத்தரப்பு டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

முதல் போட்டியில் இலங்கையுடன் தோல்வியுற்ற இந்தியா, இன்று அந்த அணியுடன் இரண்டாவது முறையாக மோத உள்ளது. இதனிடையே, வீரர்கள் அனைவரும் நேற்று ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு இருந்த இசைக்குழு ஒன்று ஹிந்தி பாடல்களை பாடியது.

அப்போது, இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவும் அவர்களுடன் இணைந்து கொண்டார். ஹிந்தி பாடகர் கிஷோர் குமாரின் ’ஹே ஷாம் மஸ்தானி’ பாடலை அவர் பாடி அசத்தினார். இந்த வீடியோவை, ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன், ‘பயிற்சி இல்லாமல் வெற்றி பெற முடியாது மற்றும் செயல்திறன் இருந்தால் தோல்வி கிடையாது. எனது பாடும் திறனுடன் சேர்த்து எனக்கு இழக்க எதுவும் இல்லை! வேடிக்கையான அணியுடன் வேடிக்கையான தருணம் இது’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பி.சி.சி.ஐயும் ரெய்னாவின் இந்த பாடல் வீடியோவை, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இசைப்பிரியரான சுரேஷ் ரெய்னா, இதற்கு முன்பும் ‘மீருதியா கேங்க்ஸ்டர்ஸ்’ எனும் ஹிந்தி பாடலைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்