காதல் பறவைகள்! இணையத்தை அதிர வைத்த கோஹ்லி- அனுஷ்காவின் புகைப்படம்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்
319Shares
319Shares
lankasrimarket.com

விராட் கோஹ்லியின் மனைவியான அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோஹ்லியும், பிரபல திரைப்பட நடிகையான அனுஷ்கா சர்மாவும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணத்திற்கு கோஹ்லியும், படத்தில் நடிப்பதற்காக அனுஷ்கா சர்மாவும் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர்.

மிகவும் பிசியாக இருந்த இருவரும் சமீபத்தில் இந்தியாவிற்கு திரும்பினர். அதன் பின் றைந்த நடிகை ஸ்ரீதேவியின் வீட்டிற்கு இருவரும் சென்றனர்.

💑

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

நெடுநாட்களாக பிசியாக இருந்த ஜோடி தற்போது ஒன்றாக இருந்து வருவதால், இருவரும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு புகைப்படத்தை தான் அனுஷ்கா சர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதே போன்று விராட் கோஹ்லியும் அனுஷ்காவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்