இலங்கை கலவரம்: பிரபல இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்கள் கண்டனம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
357Shares
357Shares
lankasrimarket.com

புத்த மதத்தினருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே இலங்கையில் நடந்த கலவரத்துக்கு இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சனத் ஜெயசூர்யா கூறுகையில், இலங்கையில் நடக்கும் வன்முறை வெறுப்பையும் கஷ்டத்தையும் அளிக்கிறது. நான் இதனை கடுமையாகக் கண்டிக்கிறேன். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்று கோருகிறேன் என கூறியுள்ளார்.

மஹேல ஜெயவர்தனே கூறுகையில், தற்போது நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும். நான் 25 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கு மத்தியில் வளர்ந்தவன். அது அடுத்த தலைமுறையிலும் தொடர விரும்பவில்லை என கூறியுள்ளார்.

மேத்யூஸ் தனது டுவிட்டர் பதிவில், முப்பது ஆண்டுகளாக யுத்தத்தின் விளைவாக இலங்கை மக்கள் போதுமான அளவுக்கு பாதிக்கப்பட்டுவிட்டார்கள்.

வெறுப்பையும் வன்முறையையும் பரப்பும் இனவெறியாளர்களுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்