கொல்கத்தா அணித்தலைவரான தினேஷ் கார்த்திக்: கடும் அதிருப்தியில் ரசிகர்கள்

Report Print Harishan in ஏனைய விளையாட்டுக்கள்

கொல்கத்தா அணியின் தலைவராக தினேஷ் கார்த்திக் நியமனம் செய்யப்பட்டதற்கு ரசிகர்கள் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

உலக முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பங்குபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 11-வது சீசன் வருகின்ற ஏப்ரல் 7-ஆம் திகதி தொடங்கவுள்ளது.

இதற்காக 8 அணிகள் தயாராக உள்ள நிலையில் கொல்கத்தா அணியின் தலைவராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்படுவதாக இன்று காலை தகவல்கள் வெளியாகின.

இந்த அறிவிப்பு கொல்கத்தா அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான சில நிமிடங்களில் கொல்கத்தா ரசிகர்களிடம் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளது.

இந்த போட்டிக்காக 7.4 கோடி ரூபாய்க்கு தினேஷ் கார்த்திக் ஏலம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இது போன்ற எதிர்ப்பு குரல்கள் கிளம்பியுள்ளது.

இந்த எதிர்விளைவுகளை சற்றும் எதிர்பாராத கொல்கத்தா அணி நிர்வாகம் குழப்பத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்