நீதான் என் இளவரசி: வைரலாகும் சுரேஷ் ரெய்னாவின் செல்ஃபி

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தனது மகளுடன் இருக்கும் செல்ஃபி புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட, அது தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா. நீண்ட இடைவெளிக்கு பிறகு, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் சேர்க்கப்பட்ட நிலையில், அதில் சிறப்பாக விளையாடினார்.

இந்நிலையில், சுரேஷ் ரெய்னா தனது மகள் கிரேசியாவுடன் இருக்கும், செல்ஃபி புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் நேற்று வெளியிட்டார். மேலும் அந்த புகைப்படத்தின் கீழே, ‘நீதான் என் இளவரசி. என் வாழ்க்கை உன்னைச் சுற்றியே இருக்கிறது.

என் வாழ்க்கை, தேவதை கதை போல் இருப்பதாக நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை ரசித்த பலர், இதனை ஷேர் செய்து வருகின்றனர். அத்துடன், ரெய்னாவுக்கும் அவரது குழந்தைக்கும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்