ஒலிம்பிக்கில் வீராங்கனையின் மேலாடை விலகியதால் பரபரப்பு: வைரல் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஐஸ் நடன போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனையின் உடை விலகிய நிலையில் அதை சமாளித்து போட்டியை வெற்றிகரமாக அவர் முடித்துள்ளார்.

தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிப்ரவரி 9-ஆம் திகதி தொடங்கி 25-ஆம் திகதி வரை நடந்து வருகிறது.

நேற்று நடைபெற்ற ஐஸ் ஸ்கேட்டிங் நடன போட்டியில் தென் கொரியாவின் யுரா மின்- அலெக்சாண்டர் கேமிலின் ஜோடி கலந்து கொண்டு ஸ்கேட்டிங் நடனத்தை மேற்கொண்டார்கள்.

அப்போது திடீரென யுராவின் மேலாடையின் பின்பக்க கொக்கி கழன்றது.

இதையடுத்து நடனத்தை நிறுத்தாத யுரா, கீழே இறங்கிய மேலாடையை மீண்டும் மேலே தூக்கிவைத்து கொண்டே சமாளித்து நடனமாடி முடித்தார்.

இப்போட்டியில் யுரா - அலெக்சாண்டர் ஜோடிக்கு 51.97 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடம் கிடைத்தது.

போட்டிக்கு பின்னர் யுரா கூறுகையில், உடையில் இருந்த கொக்கி திடீரென கழன்றது, ஆனாலும் நடனத்தை நான் நிறுத்தவில்லை, காரணம் பாதியில் நிறுத்தினால் புள்ளிகள் கழிக்கப்படும்.

இனி இது போல நிகழாமல் இருக்க நானே என் துணியை தைத்து கொள்ளவுள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்