தென் ஆப்பிரிக்க வீரருக்கு தமிழ் கற்றுக்கொடுப்பவர் யார் தெரியுமா?

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட உள்ள தென் ஆப்பிரிக்க அணி வீரர் இம்ரான் தாஹிர், தனக்கு தமிழ் கற்றுக் கொடுப்பவர் யார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில், தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட இருக்கிறார்.

இந்நிலையில், இம்ரான் தாஹிர் தமிழ் கற்றுக்கொள்ள விரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் அவருக்கு தமிழ் கற்றுக் கொடுக்க உள்ளார். அவரின் புகைப்படத்தை, தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இம்ரான் தாஹிர், இதற்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல, ஹர்பஜன் சிங்கிற்கும் திண்டுக்கல்லை சேர்ந்த சரவணன் என்பவர், தமிழ் கற்றுக் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers