நான் அனுஷ்காவை மிஸ் செய்ய போகிறேன்: தவான் மனைவி வேதனை

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

கோஹ்லியின் மனைவியான அனுஷ்காவை மிஸ் செய்ய போகிறேன் என்று தவான் மனைவி தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.

இந்நிலையில் நேற்று முன் தினம் நடந்த ஆட்டத்தை பார்ப்பதற்காகவும், இந்திய கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா சர்மா, ஷிகர் தவான் மனைவி ஆயிஷா முகர்ஜி, ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா, புவனேஸ் குமார் மனைவி நுபுர் நகர் ஆகியோர் வந்திருந்தனர்.

போட்டியின் போது கணவர்களின் ஆட்டத்தை பார்க்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதில், தங்கள் கணவர்களின் ஓட்டங்களைக் கண்டு அவர்கள் தரும் பாவனைகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையடுத்து கோஹ்லியின் மனைவியான அனுஷ்கா சர்மா இந்தியா திரும்பவுள்ளார். இதனால் தவானின் மனைவி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தோழியான அனுஷ்கா சர்மாவை மிஸ் பண்ண போவதாக கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்