தங்கம் வென்ற பளுதூக்கும் வீரரை சாலை விபத்தில் இழந்த இந்தியா

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

சர்வதேச பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற வீரர் டெல்லியில் நிகழ்ந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

டெல்லி - சண்டிகார் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் பனிமூட்டம் காரணமாக பளு தூக்கும் வீரர்கள் சென்ற கார் சாலை மைய தடுப்பு மற்றும் சாலையோர மின்கம்பம் மீது மோதி விபத்து நேரிட்டது.

வீரர்கள் டெல்லியில் இருந்து பானிபட் சென்ற போது காலை 4 மணியளவில் அலிபுர் கிராமத்தில் கார் விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் 4 பளு தூக்கும் வீரர்கள் உயிரிழந்தனர்.

கடந்த வருடம் மாஸ்கோவில் நடைபெற்ற உலக சாம்பியன் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் வென்று தந்த வீரர் சக்‌ஷம் யாதவ், ரோஹித் ஆகிய இருவர் வடகிழக்கு டெல்லி, ஷாலிமர் பாக் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சக்‌ஷம் யாதவ் இன்று மாலை மாரடைப்பால் மரணம் அடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers