ஷிகர் தவானை அவமானப்படுத்திய விமான அதிகாரிகள்: நடந்தது என்ன?

Report Print Harishan in ஏனைய விளையாட்டுக்கள்
339Shares

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் எமிரேட்ஸ் விமான அதிகரிகளுக்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியா- தென் ஆப்ரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடர் வரும் ஜனவரி 5ஆம் திகதி முதல் தென் ஆப்ரிக்காவில் தொடங்கவுள்ளது.

இதற்கான இந்திய அணி வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அந்த நாட்டிற்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

அதேபோல் ஷிகர் தவான் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் துபாய் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்,

அப்போது குறிக்கிட்ட எமிரேட்ஸ் விமான சேவை அதிகாரிகள் தென்னாப்ரிக்கா விமானத்தில் பயனிக்க வேண்டும் என்றால் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் அவசியம் என கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஷிகர், தனது ட்விட்டரில் தங்களிடம் கண்டிப்பாக இருக்காது என தெரிந்தே அந்த ஆவணங்களை கேட்டு அதிகாரிகள் அவமானப்படுத்தியுள்ளனர்.

முற்றிலும் அநாகரிகமான இந்த செயல் தன்னை மிகவும் காயப்படுத்தியதாக பதிவிட்டுள்ளார், அவசியமில்லாமல் சில அதிகாரிகள் மரியாதை குறைவாக நடந்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

அவரின் அந்த ட்வீட்டிற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்