ரிசப்சனில் வாய்ஸ் கொடுத்த ஷாருக்கான்: மகிழ்ச்சியில் கோஹ்லிக்கு முத்தம் கொடுத்த அனுஷ்கா

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

மும்பையில் நடைபெற்ற கோஹ்லியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கோஹ்லி நடிக்க, அதற்கு ஷாருக்கான் வாய்ஸ் கொடுப்பது போன்ற சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

கோஹ்லி-அனுஷ்கா தம்பதியின் இரண்டாவது திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் நட்சத்திரங்கள், திரைப் பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் செய்த செயல்கள் தொடர்பான வீடியோ இணையத்தில் தொடர்ந்து வலம் வந்த படி உள்ளன. அந்த வகையில் பாண்ட்யா சகோதரர்கள் ஆட்டம் போட்டது தொடர்பான வீடியோ வந்தது.

இந்நிலையில் இதில் கலந்து கொண்ட பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் கோஹ்லிக்கு வாய்ஸ் கொடுத்தார். அதில், மனைவி அனுஷ்காவை பார்த்து, கோஹ்லி காதல் வசனம் பேசுகிறார்.

ஆனால், கோஹ்லியின் வாய் மட்டும் தான் அசைகிறது, குரல் ஷாருக் கானுடையது, ஷாருக் படத்தின் பிரபல வசனமான இதற்கு லிப் மூவ்மென்ட் மட்டும் கோஹ்லி கொடுக்க, ஷாருக் அதற்கு உயிர் கொடுக்க, இதைக் கண்ட அனுஷ்கா மகிழ்ச்சியில் கோஹ்லிக்கு முத்தம் கொடுத்தார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்