சோயப் அக்தர் போட்ட டுவிட்: கலாய்த்து தள்ளிய யுவராஜ் சிங்

Report Print Harishan in ஏனைய விளையாட்டுக்கள்

பாகிஸ்தானின் சோயப் அக்தர் போட்டுள்ள ட்வீட்டில் யுவராஜ் சிங் கிண்டலாக பதில் பதிவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராக அறியப்பட்டவர் யுவராஜ் சிங். குறிப்பாக 2007-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ட்ராட் பிராட் வீசிய ஒரு ஓவர் முழுவதும் சிக்சர் அடித்து அசத்தியவர் யுவராஜ்.

தற்போது 36 வயதான யுவராஜ், சமீப காலமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் தன் புகைப்படத்துடன் கூடிய ஊக்கம் வழங்கும் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

அந்த படத்தில் கையில் வெல்டிங் தலைகவசத்துடன் காணப்படும் அக்தரை கவனித்த யுவராஜ், அதை கிண்டல் செய்யும் விதத்தில் பதில் பதிவிட்டுள்ளார்.

அதில், ’கருத்து எல்லாம் சரிதான்; வெல்டிங் செய்ய எங்கு கிளம்பியுள்ளீர்கள்?’ என்பது போன்று ஹிந்தியில் கிண்டலடித்துள்ளார்.

யுவராஜின் இந்த கிண்டல் பதில், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்