விராட் - அனுஷ்காவை ஆச்சர்யப்பட வைத்த பாண்ட்யா: ரிசப்ஷனில் ருசிகரம்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்ட்யாவும் அவரது சகோதரர் கருனல் பாண்ட்யாவும் நடனம் ஆடியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இத்தாலியில் அனுஷ்காவை திருமணம் செய்து கொண்ட கோஹ்லி, திருமண வரவேற்பு நிகழ்ச்சியை இரண்டு இடங்களில் நடத்தினர்.

முதல் வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது, அப்போது பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தினார்.

இதையடுத்து இரண்டாவது வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 26-ஆம் திகதி மும்பையில் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய அணியில் தற்போது வளர்ந்து வரும் வீரராக உள்ள ஹர்திக் பாண்ட்யாவும் அவரது சகோதரர் கருனல் பாண்ட்யாவும் இணைந்து நடனம் ஆடிய வீடியோ சமூக தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்