கிறிஸ்தும்ஸ் கொண்டாட்டம்: சர்ச்சைக்குள்ளான முகமது கைப்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு சர்ச்சைகளுக்கு ஆளாவது வழக்கம்.

அதாவது, இவர் இஸ்லாம் மதத்துக்கு எதிராக செயல்படுகிறார் என்ற எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

சமீபத்தில் இவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கிளிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், அன்பும் வாழ்த்தும் பெருகட்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த புகைப்படம் டுவிட்டரில் ட்ரோல் செய்யப்பட்டு, இஸ்லாம் மதத்திற்கு எதிராக செயல்படுவதற்கு மரணிக்கலாம் என விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணிக்காக 2000-06 ஆண்டுகளில் விளையாடிய கைப் சிறந்த பீல்டராக இருந்தார், 2006 ஆம் ஆண்டு ஓய்வுக்கு பின்னர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்