இது டோனியின் ஹெலிகாப்டர் ஷாட்: வியக்க வைத்த ஹாலிவுட் பிரபலம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

பிரபல ஹாலிவுட் நடிகரும் மல்யுத்த வீரருமான டிவைன் ஜான்சன் இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் ஹெல்காப்டர் ஷாட் பற்றி கூறியது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மல்யுத்த விளையாட்டான WWE-யில் ‘The Rock’ என்று அழைக்கப்படுபவர் டிவைன் ஜான்சன், இவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் வீடியோ பேட்டி ஒன்றில் அவரிடம் கிரிக்கெட் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. கிரிக்கெட் வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டு அதற்கு ராக் விளக்கம் அளிக்க வேண்டும்.

அதன்படி அவுட், சிக்ஸர், மூன்றாவது நடுவர் முடிவு மற்றும் நோ பால் ஆகியவை குறித்த வீடியோக்கள் காண்பிக்கப்பட்டன. ஆனால் அவற்றிற்கு ராக் சரியான விளக்கம் தரவில்லை.

அதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களின் ஷாட்கள் ஒளிபரப்பப்பட்டன. முதலில் இந்திய வீரர் மகேந்திர சிங் டோனியின் ‘ஹெலிகாப்டர் ஷாட்’ காட்டப்பட்டது.

அதனை ராக் சரியாக கூறியதைத் தொடர்ந்து, இலங்கை வீரர் தில்ஷனின் ரேம்ப் ஷாட் மற்றும் ஸ்லோ பவுன்சர் என காண்பிக்கப்பட்ட அனைத்து வீடியோக்களுக்கும் ராக் சரியாக பதிலளித்தார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட் விளையாட்டு குறித்து நிச்சயம் ஒருநாள் நான் முழுமையாக அறிந்து கொள்வேன், பொறுமையாக இருந்த இந்திய ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்