மனைவி அனுஷ்காவுடன் போட்டிபோட்டு நடனமாடிய கோஹ்லி

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

மும்பையில் நடைபெற்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி- அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

இதில், அனில் கும்ப்ளே, சுனில் கவாஸ்கர், வீரேந்தர் சேவாக், உமேஷ் யாதவ்,குல்தீப் யாதவ், செடேஷ்வர் புஜாரா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, சந்தீப் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், சாய்னா நேவால் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், ஷாருக் கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ரேகா, கங்கனா ரனாவத், கரன் ஜோகர் உள்பட பாலிவுட் பிரபலங்கள் இந்த விருந்தில் பங்கேற்று புதுமண தம்பதியரை வாழ்த்தினர்.

தனது நண்பர்களின் திருமணத்திற்கு சென்றாலே பயங்கரமாக ஆட்டம் போடும் கோஹ்லி தன்னுடைய திருமண வரவேப்பில் குத்தாட்டம் போட்டுள்ளார். அதுவும் தனது மனைவி அனுஷ்காவுடன் போட்டி போட்டு நடனம் ஆடியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்