கிண்டலாக திருமண வாழ்த்து கூறிய ரோகித்: பதிலடி அளித்த கோஹ்லி

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
737Shares

தனது திருமணத்திற்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்த ரோகித் ஷர்மாவுக்கு, அதேபோன்று ஜாலியோடு நன்றி கூறியுள்ளார் விராட் கோஹ்லி.

விராட் கோஹ்லிக்கும் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதனால் இந்திய அணிக்கு ரோகித் ஷர்மா தலைவராக செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் விளாசி சாதித்தார் ரோகித் ஷர்மா.

இந்த நிலையில் ரோகித் ஷர்மா கடந்த 12ம் திகதி டுவிட்டரில் அனுஷ்கா, கோஹ்லி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதில் கணவருக்கான கையேடு தன்னிடம் உள்ளதாகவும், அதை பகிர்ந்துகொள்ள தயார் என்றும் கேலியாக குறிப்பிட்டிருந்தார் ரோகித். ஏனெனில் திருமண வாழ்வில் இவர் 2 வருட சீனியர்.

இதை பார்த்த கோஹ்லி, இன்றுதான் ரிப்ளை செய்துள்ளார். அதில், நன்றி ரோகித். அப்படியே, டபுள் செஞ்சுரி கையேட்டையும் எனக்கு ஷேர் செய்யவும் என கூறியுள்ளார்.

கோஹ்லி இதுவரை ஒருநாள் போட்டியில் டபுள் செஞ்சுரி அடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்