முன்னணி நடிகைகளை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர்கள் இவர்கள் தான்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லி, நடிகை அனுஷ்கா சர்மா இடையே நடந்துள்ள திருமணம் தான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது.

இதே போல பிரபல கிரிக்கெட் வீரர்களை மணந்த முன்னணி நடிகைகள் குறித்து காண்போம்

ஜாகிர் கான் - சகாரிகா காட்ஜ்

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் பிரபல இந்தி நடிகை சகாரிகா காட்ஜை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

சகாரிகா ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

யுவராஜ் சிங் - ஹசில் கீச்

இந்திய கிரிக்கெட் அணியின் சிக்சர் மன்னன் யுவராஜ் சிங் பிரபல பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன், பிரீத்தி ஜிந்தா போன்றோருடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டவர்.

பின்னர் இன்னொரு பிரபல நடிகையான ஹசீல் கீச்சை திருமணம் செய்து கொண்டார்.

ஹசில் கீச் பல்வேறு இந்தி படங்களில் நடித்துள்ளதுடன் தமிழில் நடிகர் அஜித்துடன் பில்லா திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் - கீதா பஸ்ரா

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கடந்தாண்டு முன்னணி நடிகையான கீதா பஸ்ராவை மணந்தார்.

முதல் பார்வையில்யே கீதா மீது ஹர்பஜனுக்கு காதல் வந்த நிலையில் அவரை தனது வாழ்க்கை துணையாக ஆக்கி கொண்டார்.

மன்சூர் அலி கான் பட்டோடி - சர்மிளா தாகூர்

இந்திய கிரிக்கெட் அணியின் மிக இளம் வயது தலைவர் என்ற பெருமையை பட்டோடி ஒரு காலத்தில் பெற்றவராவார்.

இவர் இந்தி திரையுலகில் கனவு கன்னியாக வலம் வந்த சர்மிளா தாகூரை கடந்த 1968-ல் திருமணம் செய்தார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்