இலங்கை ரசிகருக்கு இந்திய கிரிக்கெட் வீரர் செய்த நெகிழ்ச்சி உதவி

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியாவுக்கு வந்த இலங்கை ரசிகர் மீண்டும் தாய் நாட்டுக்கு செல்வதற்கான பயண கட்டணத்தை இந்திய வீரர் ரோகித் சர்மா அளித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை - இந்தியா இடையிலான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டிகளை நேரில் காண இலங்கையிலிருந்து கயன் செனான்யகா, முகமது நிலம், புபூடு ஆகிய மூன்று ரசிகர்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இலங்கை ரசிகர் முகமதின் அப்பாவுக்கு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு தகவல் வந்துள்ளது.

ஆனால் முகமது இலங்கைக்கு திரும்ப டிசம்பர் 26-திகதிக்கு டிக்கெட் எடுத்துள்ள நிலையில் உடனடியாக அங்கு செல்ல அவரிடம் பணம் இல்லாமல் இருந்துள்ளது.

இது குறித்து இந்திய ரசிகர் ஒருவர் மூலம் இந்திய அணி தலைவர் ரோகித் சர்மாவுக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து முகமதை அழைத்து தனது செலவில் இலங்கைக்கு ரோகித் சர்மா டிக்கெட் வாங்கி கொடுத்துள்ளார்.

இதையடுத்து கடந்த ஐந்தாம் திகயே முகமது இலங்கைக்கு சென்றுவிட்டார். அவர் கூறுகையில், தற்போது ஆப்ரேஷனுக்கு பிறகு என் தந்தை நலமாக உள்ளார். ரோகித் சர்மா என் நிலையை கேட்டவுடன் டிக்கெட் எடுத்து கொடுத்துவிட்டார்.

தந்தை ஆப்ரேஷன் செலவுக்கு பண உதவி தேவையா என கூட கேட்டார், நான் தான் மறுத்துவிட்டேன்.

டிக்கெட் எடுத்து கொடுத்ததற்காக அவருக்கு நன்றி கூறி கொள்கிறேன். இதோடு இத்தாலியில் இருக்கும் விராட் கோஹ்லியும் உதவி ஏதும் தேவையா என கேட்டு எனக்கு மெசேஜ் அனுப்பினார்.

அவர் திருமணத்துக்காக நான் வாழ்த்தினேன், இந்திய கிரிக்கெட்டர்களிடம் இருந்து அதிகமான அன்பைப் பெற்றதை எனக்கான ஆசிர்வாதமாக கருதுகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்