ஹர்த்திக் பாண்டியாவை வீழ்த்திய டோனி: எதில் தெரியுமா?

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான பயிற்சியின் போது டோனிக்கும், ஹர்திக் பாண்டியாவிற்கும் நடந்த ஓட்டப்பந்தய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மொகாலியில் இன்று நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

போட்டிக்கு முன்பாக இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, மகேந்திர சிங் டோனிக்கும், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்துள்ளது.

இந்த பந்தயத்தில், இளம் வீரர் பாண்டியாவை, 36 வயதான டோனி தோற்கடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்