கோஹ்லி- அனுஷ்கா சர்மாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா தம்பதியின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் இரு தினங்களுக்கு முன்னர் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார்கள்.

தன் சாதனைகளால் உலகமே திரும்பி பார்க்கும் கிரிக்கெட் வீரர் கோஹ்லியும், முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருக்கும் அனுஷ்கா சர்மாவும் தங்கள் திறமைகளால் எக்கச்சக்க சொத்துக்களை குவித்து வைத்துள்ளனர்.

அனுஷ்கா சர்மா ஒரு படத்திற்கு சுமார் ரூ.10 கோடி சம்பளமாக பெறுகிறார். ஒரு நிறுவன விளம்பர தூதராக இருந்து ரூ.4 கோடி வசூல் செய்து வருகிறார்.

இவரிடம் ரோவர், மெர்சிடிஸ் உள்ளிட்ட சொகுசு கார்கள் ரூ. 36 கோடி மதிப்புக்கு இருக்கின்றன.

அதோடு சகோதரர் கர்னேஷ் சர்மாவுடன் இணைந்து ‘கிளீன் ஸ்லேட் பிலிம்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார்.

அனுஷ்காவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.220 கோடி என கூறப்படுகிறது.

கோஹ்லி கிரிக்கெட்டில் முதல்நிலை வீரருக்கான சம்பளம் பெறுவதுடன் பல்வேறு நிறுவன விளம்பரங்களில் நடித்து வருவதோடு, ஐபிஎல் ஏலத்தில் அதிக பணம் கொடுத்து வாங்கப்படும் வீரர்களில் முன்னிலையில் உள்ளார்.

இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.382 கோடி இருக்கும் என தெரிகிறது.

இவர் ரூ.42 கோடிக்கு முதலீடு மற்றும் கார்கள் வாங்கி வைத்துள்ளார்

கோஹ்லிக்கு மும்பையில் ரூ.34 கோடிக்கு கடலை பார்த்த படி 7,171 சதுர அடி பரப்பில் 34 மாடிகள் கொண்ட கட்டிடம் உள்ளது

தம்பதியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.602 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்