அவுஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொள்ளுங்கள்: விராட் கோஹ்லிக்கு அழைப்பு

Report Print Gokulan Gokulan in ஏனைய விளையாட்டுக்கள்
130Shares

அவுஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் திருமணத்தை நடத்திக்கொள்ளும்படி இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியும், பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர்.

சமீபத்தில் இருவரும் இத்தாலிக்கு சென்று திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவின, ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.

இந்தியா - இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் இந்த சர்ச்சைகள் எழுந்ததாக கூறப்பட்டன.

20 நாட்கள் விடுமுறையில் இருந்த விராட் கோஹ்லி, கிரிக்கெட் தொடருக்காக 28-ஆம் திகதி தென்னாப்ரிக்கா செல்லவுள்ள இந்திய அணிக்கு தலைமை ஏற்கவுள்ளார்.

இந்நிலையில் அடிலெய்டு ஓவல் மைதான தலைமை செயல் அதிகாரி ஆன்ட்ரிவ் டேனியல்ஸ் அளித்துள்ள பேட்டியில் ‘‘விராட் கோஹ்லி - அனுஷ்கா திருமணம் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்றால் சிறப்பாக இருக்கும்.

இந்த மைதானத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோஹ்லிக்கு, இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி அதிக மகிழ்ச்சியான நினைவுகளை அளிக்கும்” என அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த மைதானத்தில் 2012-ஆம் ஆண்டில் தனது முதல் சதத்தை அடித்திருந்த கோலி, இதுவரை மூன்று சதங்களை விளாசியுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோர் ஆன 90(அவுட்இல்லை) ரன்களை இங்குதான் அடித்தார். 8 இன்னிங்சில் 624 ரன்கள் குவித்துள்ளார். இதன் சராசரி 89 ஆகும்.

150 வருட பழைமை வாய்ந்த இந்த மைதானத்தில் சமீபத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று ஆஷிஷ் கோப்பை போட்டியை இரண்டு லட்சம் ரசிகர்கள் கண்டு களித்துள்ளனர்.

மேலும் விளையாட்டு போட்டிகள் நடைபெறாத நாட்களில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்