அதிரடி காட்டிய யாழ்ப்பாணம் ஏஞ்சல் பாடசாலை: தேசியமட்ட கூடைப்பந்தாட்டத்தில் இரண்டாமிடம்

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கூடைப்ந்தாட்ட சங்கத்தினால் 19 வயது ஆண்களுக்கான கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி தேசிய ரீதியில் நடாத்தப்பட்டது.

இப்போட்டியில் பங்குபற்றிய மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப்பாடசாலை அணி முதற்கட்ட 4 போட்டிகளில் பங்குபற்றி அனைத்து போட்டிகளிலும் அதிகூடிய புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று காலிறுதிப்போட்டிக்கு தெரிவாகியது.

காலிறுதியில் றோயல் அணியை எதிர்கொண்ட ஏஞ்சல் அணியினர் பலத்த சாவால்களின் மத்தியில் அதிரடி வெற்றியைப்பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றனர்.

அரையிறுதிப்போட்டியில் மட்டக்களப்பு மைக்கல் கல்லூரி அணியுடன் போட்டியை எதிர்கொண்டனர். இப் போட்டியில் ஏஞ்சல் அணி வீரர்களின் அசத்தல் ஆட்டத்தின் மூலம் ஆரம்பம் முதல் போட்டியின் இறுதி வரை போட்டியின் போக்கை தம்வசம் வைத்திருந்து அசத்தல் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

இலங்கையின் கூடைப்பந்தாட்ட வரலாற்றில் பாடசாலை மட்ட கூடைப்பந்தாட்டத்தில் இரு தமிழ் அணிகள் அரையிறுதி முன்னேறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இறுதிப்போட்டி கொழும்பு லைசியம் சர்வதேசப்பாடசாலை அணியுடன் நடைபெற்றது இப் போட்டியின் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடி போட்டியின் போக்கை தம்வசம் வைத்திருந்த ஏஞ்சல் அணியை வீழ்த்தி இறுதி கால்பகுதியில் முன்னேறி லைசியம் சர்வதேசப்பாடசாலை அணியினர் வெற்றி பெற்றனர்.

இறுதிவரை போராடிய ஏஞ்சல் அணியினர் குறைவான புள்ளிகளின் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இரண்டாவது தடவையாகவும் இரண்டாம் இடத்தை பெற்றனர்.

இத்தொடரின் ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாலகுமார் சயந்தராம் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார். மானிப்பாய் ஏஞ்சல் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜெசிந்தன் அவர்கள் செயற்பட்டிருந்தார்.

மேலும் இத்தொடரில் இறுதிவரை பங்கேற்றதன் மூலம் சில ஏஞ்சல் வீரர்களுக்கு வேலைவாப்புக்களுக்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளைமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்