கைக்குழந்தையுடன் காதலரை மணந்தார் செரீனா வில்லியம்ஸ்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தனது காதலரான அலெக்சிஸ் ஓகானியனை நேற்று திருமணம் செய்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆவார். இவருக்கும், ரெட்டிட் நிறுவனத்தின் துணை நிறுவனரான அலெக்சிஸ் ஓகானியனுக்கும் கடந்த ஆண்டு டிசம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து, டென்னிஸ் வாழ்விலிருந்து விலகி இருந்த செரீனா, தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். பின்னர், கடந்த செப்டம்பர் 1ஆம் திகதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், கைக்குழந்தையுடன் செரீனா மற்றும் ஓகானியனின் திருமண விழா நேற்று அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் கோலாகலமாக நடந்தது. மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே திருமண அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

36 வயதாகும் செரீனா, 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். கடைசியாக அவர், கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தினை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...