கிரிக்கெட்டராக ஆகவில்லையெனில்.. கோஹ்லியின் ருசிகர பேட்டி

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

கிரிக்கெட் வீரராக ஆகவில்லையெனில் பேட்மிண்டன் வீரராக ஆகியிருப்பேன் என விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் விராட் கோஹ்லி தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், கிரிக்கெட்டுக்கு பிறகு என் மனதுக்கு நெருக்கமான விளையாட்டு பேட்மிண்டன் தான்.

கிரிக்கெட் வீரராக வெற்றி பெற்றிருக்கவில்லையெனில் பேட்மிண்டன் வீரராக ஆகியிருப்பேன்.

இன்றைய இளைஞர்கள் உடல் ரீதியான விளையாட்டுகளில் ஈடுபடுவது மிகவும் அவசியம்

தற்போது பல குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே அமர்ந்து வீடியோ கேம் விளையாடுவதை பார்க்கிறோம். அவர்களுக்கு உடல் ரீதியான விளையாட்டுக்கள் மிகவும் அவசியமானது.

நான் அவர்களை கிரிக்கெட் மட்டும் விளையாடு என சொல்லவில்லை. தங்களுக்கு பிடித்த எந்தவொரு விளையாட்டையும் தொழில்ரீதியாக கற்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers