கோஹ்லியின் படத்துக்கு கொட்டும் வருவாய்: எத்தனை கோடி தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளத்தில் கோஹ்லி வெளியிடும் புகைப்படம் அல்லது காணொளிக்கு சுமார் 3.2 கோடி ரூபாய் வரை கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி, கிரிக்கெட் அரங்கில் வெற்றி மேல் வெற்றிகள் குவித்து வருகிறார்.

தற்போது மீன்று வித கிரிக்கெட் அணிக்கும் தலைவராக பொறுப்பேற்றுள்ள கோஹ்லியை இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வெறு நாடுகளில் உள்ள ஏராளமான வலைத்தள பயன்பாட்டாளர்கள் பின்பற்றி வருகின்றனர்.

இவரது டுவிட்டர்(2 கோடி பேர்), பேஸ்புக்(3.6 கோடி), இன்ஸ்டாகிராம்(1.67 கோடி) என மொத்தம் 7.27 கோடி பேர் பின்பற்றுகின்றனர்.

இதனால் கோஹ்லிக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் வருமானம் கொட்டத் துவங்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோஹ்லி வெளியிடும் ஒரு புகைப்படம் அல்லது வீடியோவுக்கு சுமார் 3.2 கோடி ரூபாய் வருவாய் வருவதாக பிரபல நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இது ஐந்து முறை சிறந்த கால்பந்து வீரருக்கான பிபா விருது வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இணையான வருமானம் என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்