பந்து வீச முடியாமல் தடுமாறிய ஜமைக்கா வீரர்: இலங்கை வீரர் செய்த நெகிழ்ச்சி செயல்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ, ஜமைக்காவைச் சேர்ந்த வீரர் ஒருவருக்கு தனது சொந்த ஷு-வை கொடுத்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.

இலங்கை A அணி மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு A அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இத்தொடருக்காக இலங்கை அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, ஜமைக்காவைச் சேர்ந்த வீரர் ஒருவர், இலங்கை அணி துடுப்பாட்ட வீரர்களுக்கு பந்து வீசியுள்ளார்.

அப்போது அவரது காலணி ரப்பரால் ஆனதால், அவரால் சரியாக பந்து வீச முடியவில்லை.

இதைக் கண்ட இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ, சர்வதேச அளவில் கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் தனது ஷு-வை அந்த வீரருக்கு கொடுத்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதால், அசித பெர்னாண்டோவின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்