மோசமாக நடந்துகொண்ட இண்டிகோ விமான நிறுவன ஊழியர்: பி.வி.சிந்து

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

பாட்மிண்டன்ய வீராங்கனை பி.வி. சிந்து இன்று ஹைதராபாத்திலிருந்து மும்பைக்கு தனியார் விமான சேவையான இண்டிகோ நிறுவனத்தின் விமானத்தில் சென்றது மோசமான நாளாக அமைந்தது என்று அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பி.வி.சிந்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''இண்டிகோ விமான ஊழியர் அஜிடேஷ் என்பவர் என்னிடம் மிக மோசமாகவும், கடுமையாகவும் நடந்து கொண்டார்.

அந்த விமானத்திலிருந்த பணிப்பெண் அஷிமா அவருக்கு பயணிகளிடம் முறையாக நடந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கியும் அவர் என்னிடம் மோசமாக நடந்து கொண்டது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

இது போன்ற பணியாளர்கள் இண்டிகோ போன்ற விமான சேவை நிறுவனத்தில் பணிபுரிவது பயணிகளிடம் இண்டிகோ நிறுவனத்திற்கான புகழ் கெட்டுப் போக நேரிடும்'' என்று பதிவிட்டுள்ளார்.

பி.வி. சிந்துவின் இந்தச் குற்றச்சாட்டு குறித்து இண்டிகோ நிறுவனம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்