என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்: கோஹ்லியிடம் கோரிக்கை வைத்த ஆண் பொலிஸ்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லிக்கு உலகம் முழுவதும் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்பது அனைவரும் அறிந்த விடயம்.

சமீபத்தில் பாகிஸ்தான் - உலக லெவன் அணிகள் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டிகள் நடந்தன.

விராட் கோஹ்லி, உலக லெவன் அணியில் இடம் பெறாத ஏக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் காட்டிய பேனரில் வெளிப்பட்டது.

அதிலும், கடைசி டி20 போட்டியின் போது, மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் காவலர் ஒருவர் கையில் வைத்திருந்த பேனர் தற்போது வைரலாகியுள்ளது.

காரணம், கோஹ்லி என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்ற வாசகம் அதில் எழுதப்பட்டிருந்தது.

இருப்பினும் பேனரிலிருந்த வாசகத்தை அந்த காவலர் தன் கைப்பட எழுதினாரா? என்பதற்கான உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.


மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்