மனைவிக்கு அறுவை சிகிச்சை: தவானின் உருக்கமான டுவிட்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான், தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்தியா அவுஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடைபெற உள்ளது.

இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் தவான், அவரது மனைவிக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் முதல் 3 போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தவான் தனது மனைவி ஆயிஷா முகர்ஜியுடன் உள்ள புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில், என் மனைவியுடன் இங்கு இருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளேன். இந்த நேரத்தில் அவருடன் நான் இங்கு இருப்பது அவருக்கு வலிமை சேர்க்கும் என்றும் இன்னும் சில நாட்களில் அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது அது நல்லபடியாக முடியும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்