ஆட்டோ ரிக்ஷாவில் வலம் வந்த இலங்கை வீரர்: வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் மிகச்சிறப்பாக செயல்பட்ட திசரா பெரேரா தனக்கு ஆதரவளித்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான்- உலக லெவன் அணிகளுக்கு இடையில் நடந்த டி20 போட்டிகளில் இலங்கை வீரர் திசரா பெரேரா மிக சிறப்பாக விளையாடினார்.

3 போட்டிகளில் எட்டு சிக்சர்களுடன் 96 ஓட்டங்களை குவித்ததுடன் 6 விக்கெட்களையும் சாய்த்து அசத்தினார்.

சரியான பார்மில் இல்லாத காரணத்தால் இலங்கை அணியில் நிரந்தர இடம்பிடிக்க முடியாமல் பெரேரோ தவித்து வந்த நிலையில், அவர் மீண்டும் பார்முக்கு திரும்பிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

போட்டிகள் முடிந்ததும் சக வீரர்களுடன் பெரேரோ மைதானத்தில் ரிக்‌ஷாவில் ஜாலியாக வலம் வந்தார்.

பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில், பாகிஸ்தானில் உள்ள அற்புதமான மக்களிடமிருந்து எனக்கு அனைத்து விதமான அன்பும் ஆதரவும் கிடைத்தது.

நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

பெரேரோவின் அட்டகாசமான ஆட்டங்களை பார்த்து பாகிஸ்தான் ரசிகர்கள் அவரை சமூகவலைதளங்களில் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers