பாலியல் பலாத்கார வழக்கு: பிரபல கிரிக்கெட் வீரருக்கு தண்டனை அறிவிப்பு

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய தென் ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர் டயன் தல்யார்ட் (47), அந்நாட்டின் பார்டர் அணிக்காகவும், இங்கிலாந்து கிளப் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இந்நிலையில், டயன் 2002 முதல் 2012 வரை 150 முறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.

இந்த புகார் குறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தல்யார்ட் மீதான 19 வழக்குகளிலும் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் அவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers