தங்க மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
119Shares

பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பனின் பெயர் அர்ஜூனா விருது வழங்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து கொடுத்தார்.

இந்த பிரிவில் கலந்து கொண்ட மற்றொரு இந்திய போட்டியாளர் வருண் சிங் பாட்டி வெண்கலம் வென்றார்.

தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல் தாண்டிய உயரம் 1.89 மீட்டர் ஆகும்.

தங்கப்பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்து தந்த மாரியப்பன் தங்கவேலுக்கு தற்போது அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மாரியப்பனுடன் சேர்ந்து வருண் பாட்டி, இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா, வீராங்கனை ஹர்பிரின்த் கவுர், கோல்பர் சாவ்ராசிய என மொத்தம் 17 பேருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்