வீனஸ் கார் மோதிய விவகாரம்: புதிய ஆதாரம் சிக்கியது

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

கார் மோதி முதியவர் உயிரிழந்த விபத்தில், டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் போக்குவரத்து விதிகளை மீறவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பச்சை விளக்கு எரிந்தபிறகு தான் வீனஸ் வில்லியம்ஸ் தனது காரை இயக்கினார் என்பது வீடியோவில் பதிவாகியுள்ளதாக புளோரிடா காவல்துறை தெரிவித்துள்ளது.

எனினும் வீனஸிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என புளோரிடா காவல்துறை கூறியுள்ளனர். வீனஸ் வில்லியம்ஸ் கடந்த யூன் மாதம் ஒன்பதாம் திகதி, தனது வீட்டின் அருகே உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவரின் கார், அருகே சென்ற மற்றொரு காரில் மோதியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது விபத்தில் காயமடைந்த 74 வயது Jerome Barson, சிகிச்சைப் பலனின்றி 14 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சிகப்பு விளக்கு எரிந்தபோது வீனஸ் காரில் சென்றதாக போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் வீனஸ் ‌தரப்பில் இந்தக் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments