டோனி-கங்குலி சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை கஸ்தூரி: ஆத்திரத்தில் ரசிகர்கள்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

திரைப்பட நடிகையான கஸ்தூரி கங்குலி பற்றி டுவிட்டரில் கூறியது, அவரது ரசிகர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் டோனி(36). இவருடைய பிறந்த நாள் நேற்று உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டது. இவருக்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் என பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

அந்த வகையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், டோனியின் விஷ்ணு உருவம் கொண்ட புகைப்படத்தை பதிவேற்றம் செய்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த சர்ச்சை நிறைவடைவதற்குள் கஸ்தூரி இன்று இந்திய அணியின் முன்னாள் வீரரான கங்குலிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

அதில் நான் உங்களுடைய தீவிர ரசிகையாக இருந்தேன், உங்களை பார்க்கும் வரை என்று பதிவேற்றம் செய்துள்ளார். இது கங்குலி ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று கங்குலியின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments