பெருமைப்படுகிறேன்: வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட ரோஹித் சர்மாவின் மனைவி

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

ஐபிஎல் கிண்ணத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் சர்மாவுக்கு அவரது மனைவி இன்ஸ்டாகிராமில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட்டில் புனே அணியை தோற்கடித்து ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதன்மூலம் ஐபிஎல் கிண்ணத்தை மூன்று முறை வென்ற வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா.

இதுகுறித்து அவரது மனைவியான ரித்திகா சஜ்தேவ் இன்ஸ்டாகிராமில், வாழ்த்துகள். உங்களது அணி மீண்டும் ஒருமுறை ஐபிஎல் கிண்ணத்தை வென்றதற்காக மட்டுமல்ல.

கடந்த 6 மாதமாக நீங்கள் அடைந்த வேதனைகளை நான் அறிவேன். அதில் இருந்து முன் எப்போதையும் விட வேகமாகவும், வலுவாகவும், மனஉறுதி மிக்கவராகவும் மீண்டு வந்து இருக்கிறீர்கள், அதற்கு வாழ்த்துகள்.

நான் அறிந்த மனவலிமை மிக்க வீரர் நீங்கள் தான். உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். கிண்ணத்தை வென்றுத்தந்த சக வீரர்களுக்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments