ஐபிஎல் ஹீரோ வாஷிங்டன் சுந்தர்: பெயருக்கு பின்னால் இருக்கும் உருக்கமான காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர், ஐபிஎல் குவாலிபையர்-1 சுற்றில் புனே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி அந்த அணியின் முதுகெலும்பை உடைத்து எறிந்தவர் வாஷிங்டன் சுந்தர்.

டோனியின் அதிரடியும், சுந்தரின் பந்து வீச்சும் புனே அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றது. புனே டூ ஹைதராபாத் வயா வாஷிங்டன் என ஒரு பிரபல ஆங்கில பத்திரிகை தலைப்பு போடும் அளவுக்கு வாஷிங்டன் ஓவர் நைட்டில் பிரபலமாகிவிட்டார்.

இதுவரை 10 போட்டிகளில் ஆடிய வாஷிங்டன் சுந்தர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குவாலிபையர்-1 போட்டியில்தான் இவர் தனது முழு கோட்டாவான 4 ஓவர்களை வீச வாய்ப்பு கிடைத்தது.

வாஷிங்டன் என்ற பெயருக்கும், சென்னையில் பிறந்த சுந்தருக்கும் என்ன சம்மந்தம் என்ற கேள்வி மட்டும் ரசிகர்களை துரத்திக் கொண்டே உள்ளது.

இதுகுறித்து எம்.சுந்தர் தெரிவிக்கையில், சென்னை திருவல்லிக்கேணியில் நான் வசித்த தெருவிற்கு 2 தெரு தள்ளி முன்னாள் ராணுவ வீரர் பி.டி.வாஷிங்டன் என்பவர் வசித்து வந்தார்.

எனது சிறு வயதில் காட்பாதராக இருந்தவர் அவர்தான். நான் ஏழ்மையான குடும்ப பின்னணி கொண்டிருந்தேன். எனக்கு பல உதவிகள் செய்தது வாஷிங்டன்தான்.

1999ம் ஆண்டு, வாஷிங்டன் இறந்தார். அந்த ஆண்டுதான் எனது மனைவி ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

இந்து முறைப்படி குழந்தையின் காதில் ஸ்ரீநிவாசன் என பெயரை ஓதினேன். ஆனால், பி.டி.வாஷிங்டன் மீதான அன்பால் பிறகு அவரது பெயரை எனது மகனுக்கு சூட்டினேன்.

இப்படித்தான் வாஷிங்டன் சுந்தர் என எனது மகனுக்கு பெயர் கிடைத்தது. இவ்வாறு எம்.சுந்தர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments