பிரபல கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆதாரங்கள் சிக்கியது: என்ன தண்டனை?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் சார்ஜில்கான், காலித் லத்தீப் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.

இந்த போட்டிகளின் போது அந்நாட்டு வீரர்களான சார்ஜிகான் மற்றும் காலித் லத்தீப் ஆகியோர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதையடுத்து இருவரையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்தது.

இதை எதிர்த்து இருவரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர், இந்த மனு தள்ளுபடி ஆனது.

இந்நிலையில், சார்ஜிகான் மர்றும் காலித் ஆகிய இருவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

இதுதவிர சாஷிப்ஹசன், நசீர்ஜாம்ஷெட் ஆகிய இரு வீரர்களும் சூதாட்ட புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது, பின்னர் இவர்களுக்கான தண்டனை குறித்து தெரியவரும்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments