டோனியை அசிங்கப்படுத்திய புனே அணி நிர்வாக தலைவர்: தகுந்த பதிலடி கொடுத்த சாக்‌ஷி

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

டோனியை மறைமுகமாக சாடிய புனே அணியின் நிர்வாக தலைவரான ஹார்ஷ் கோன்காவுக்கு டோனியின் மனைவி சாக்‌ஷி மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

இந்திய அணிக்கு உலகக்கிண்ணம் மற்றும் ஐசிசி சாம்பியன் டிராபி என மூன்று வித தொடர்களை வென்று தந்தவர் டோனி.

முன்னர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அவர் சில மாதங்களுக்கு முன்னர் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

அதன் பின்னர் இந்திய அணியை கோஹ்லி வழிநடத்திச் செல்கிறார். இதைத் தொடர்ந்து டோனி ஐபிஎல் புனே அணியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகினார்.

அதற்கு பதிலாக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்மித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அண்மையில் மும்பைக்கு எதிரான போட்டியில், ஸ்மித்தை புனே அணியின் நிர்வாக தலைவர் ஹார்ஷ் கோன்க் புகழ்ந்து தள்ளினார்.

இது மறைமுகமாக டோனியை சாடுவது போன்றும், அசிங்கப்படுத்தியதும் போன்று இருந்தது. இதனால் ரசிகர்களை அவரை டுவிட்டரில் ஒரு கை பார்த்துவிட்டனர்.

#throwback !!

A post shared by Sakshi (@sakshisingh_r) on

இந்நிலையில் டோனியின் மனைவியான சாக்‌ஷி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சென்னை அணியின் ஹெல்மட் மற்றும் டீ சர்ட் அணிந்த படி இருந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருந்தார்.

A post shared by Sakshi (@sakshisingh_r) on

மேலும் எறும்புகளை பறவைகள் சாப்பிடுகின்றன, அதுவே பறவைகள் இறந்த பின்பு எறும்புகள் அதை சாப்பிடுகின்றன, காலம் என்பது நிலையானது கிடையாது, அது சுற்றிக் கொண்டே இருக்கும்.

காலங்கள் மாறும் யாரையும் தரக்குறைவாக பேசக்கூடாது என்று புனே அணி தலைவரை சாக்‌ஷி மறைமுகமாக சாடியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments