தோல்விக்கு பின்னர் டிரசிங் ரூமில் ஆட்டம் போட்ட டோனி...ஏன்? அசத்தல் வீடியோ

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக விளையாடி வரும் டோனி, டிரஸ்சிங் ரூமில் சிறிய ஆட்டம் போட்டுள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. பத்தாவது ஐபிஎல் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

ஐபில் தொடரில் சென்னை மற்றும் புனே அணிகளுக்கு தலைவராக வலம் வந்த டோனி, தற்போது தலைவர் பதவியை உதறிவிட்டு, அணியில் ஒரு வீரராக விளையாடி வருகிறார்.

A post shared by @mahi7781 on

அண்மையில் மும்மைக்கு எதிரான போட்டியில், புனே அணியின் தற்போது தலைவராக உள்ள ஸ்மித்தை புனே அணியின் நிர்வாக தலைவர் பாராட்டினார். இது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது.

இந்நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் புனே அணி தோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் டோனி வீரர்களின் டிரசிங் ரூமில் சிறிய ஆட்டம் போட்டுள்ளார். அதை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments