ஐபிஎல் போட்டியில் முத்தம் கொடுத்து பிரபலமான இளம் பெண்: யாருக்கு தெரியுமா?

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

பெங்களூரு மற்றும் டெல்லி டேர்டேவில்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தின் போது இளம் பெண் ஒருவர் முத்தம் கொடுத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் பத்தாவது ஐபிஎல் போட்டி கடந்த 5 ஆம் திகதி தொடங்கியது. இதில் அனைத்து அணிகளும் ஒரு போட்டிகள் விளையாடி முடித்து விட்டன.

அட்டவணையில் சன்ரைசர்ஸ் அணி இரண்டு போட்டிகள் விளையாடி, இரண்டிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கொல்கத்தா அணியும், மூன்றாவது இடத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியும் உள்ளன.


hhahaahhah by japan-cctv-show

இந்நிலையில் கடந்த 8 ஆம் திகதி வாட்சன் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ஜாகிர்கான் தலைமையிலான டெல்லி டேர்டேவில்ஸ் அணிகளும் மோதின. இப்போட்டியில் டெல்லி அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அப்போட்டியின் போது இளம் ரசிகைகள் சிலர் தங்களுடைய மொபைல் போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மைதானத்தில் இருக்கும் பெரிய திரையில் காண்பிக்கப்பட்டனர்.

உடனடியாக இதை அறிந்த அதில் இருந்த பெண் ஒருவர் கேமராவை பார்த்து உடனடியாக முத்தம் கொடுத்தார். தற்போது இந்த வீடியோ ஐபிஎல் போட்டியில் முத்தம் கொடுத்து பிரபலமான இளம் பெண் என்று கூறப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments