வெளுத்து வாங்கிய யுவராஜ்: சிரிப்பை நிறுத்தாத மனைவி

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியாவில் நேற்று பத்தாவது ஐபிஎல் போட்டி துவங்கியது. இதில் வாட்சன் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் மோதின.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ஓட்டங்கள் எடுத்தது.

அதிரடியாக விளையாடிய யுவராஜ் சிங் 7 பவுண்டரி, 3 சிக்சர் என 62 ஓட்டங்கள் குவித்தார். இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 35 ஓட்டங்கள் வித்தியசாத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இப்போட்டியில் யுவராஜ் சிங் வானவேடிக்கை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, அவரது மனைவி மற்றும் நண்பர்கள் சிரித்துக் கொண்டே போட்டியை ரசித்தனர். அதற்கு ஏற்றாற் போல் யுவராஜ்சிங்கும் தன்னுடைய பேட்டை வைத்து சுழற்றி சுழற்றி காண்பித்தார்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments