ஓகே சொன்ன எமிஜாக்சன்: கிரிக்கெட் வீரர்களுக்காக நட்சத்திர விடுதி

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

ஐதராபாத்தில் நாளை தொடங்கும் ஐபிஎல் தொடக்க விழாவில் நடிகை எமி ஜாக்சன் நடனமாடவுள்ளார்.

இந்தியாவில் ஆண்டு தோறும் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதே போன்று இந்தாண்டிற்கான 10-வது ஐபிஎல் தொடர் நாளை தொடங்கி மே மாதம் 21 ஆம் திகதி வரை நடக்கிறது.

இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன, மொத்தம் 60 போட்டிகள் நடக்கின்றன. இத்தொடரில் தொடக்க தினமான நாளை பிரபல நடிகை எமிஜாக்சன் நடனமாடவுள்ளார்.

சில இந்திப் பாடல்களுக்கு அவர் ஆறு நிமிடம் நடனமாடுகிறார். இதே போல ஐபிஎல் போட்டியின் இறுதி நாள் அன்றும் ஆடுவதற்கு அவரிடம் பேசியுள்ளதாகவும், ஆனால் அவர் தற்போது வரை சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களை கவரும் வகையில் ராஜ்கோட்டில் நட்சத்திர விடுதி ஒன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஹோட்டலின் நுழைவு வாயில் முதல், விடுதியின் ஒவ்வொரு அறையிலும் வீரர்களின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

ராஜ்கோட்டில் விளையாடும் வீரர்கள் பெரும்பாலும் இங்கு தான் தங்குவார்கள் என்பதால் இந்த முடிவு என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments