குத்துச் சண்டை வரலாற்றில் நடந்த அதிர்ச்சி? ரத்தம் ரத்தமாக வாந்தி எடுத்த வீரர்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

பிரபல குத்துச் சண்டை வீரரான மார்குயிஷ், எதிரணி வீரரை அடித்ததில் அவர் ரத்தம் ரத்தமாக வாந்தி எடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவரும், குத்துச் சண்டை உலகின் சூப்பர் ஸ்டாருமான Juan Manuel Marquez க்கும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த Robbie Peden க்கும் கடந்த 2002 ஆம் ஆண்டு போட்டி நடந்துள்ளது.

இதில் இருவரும் ஆக்ரோசமாக விளையாடினர் . Juan Manuel Marquez, ஒரு கட்டத்தில் Robbie Pedenஐ முகத்தில் ஒரு குத்து விட்டார். இதனால் நடுவர் இருவருக்கும் இடைவெளி கொடுத்தார்.

அதன் பின் இடைவெளி எடுப்பதற்காக Robbie Peden குறித்த இடத்தில் உட்கார்ந்தார். அப்போது ராபியின் பயிற்சியாளர் அவரிடம் வந்து பேசும் போது, திடீரென்று ரத்தம் ரத்தமாக வாந்தி எடுத்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பயிற்சியாளர் உடனடியாக அருகில் இருந்த வாலியை எடுத்து அந்த வாந்தியை பிடித்தார்.

Robbie Peden தொடர்ந்து வாந்தி எடுத்ததால், போட்டி இடையில் நிறுத்தப்பட்டு, Juan Manuel Marquez வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments