இந்த முறை எந்த அணி ஐபிஎல் கிண்ணத்தை வெல்லும்? ஜோதிடர்களின் கணிப்பு

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் ஐபிஎல் போட்டிக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளன.

அனைத்து அணி வீரர்களும் இந்த தொடரில் கலந்து கொள்வதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

அந்த வகையில் இந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி தொடங்கவுள்ளது.

இதற்கான அணி வீரர்கள் அனைவரும் அவர்கள் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டியில் நட்சத்திர வீரர் கோஹ்லி, அஸ்வின் மற்றும் முக்கிய வீரர்கள் சிலர் காயங்கள் மற்றும் சொந்த காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

இருப்பினும் ஐபிஎல்லுக்கான எதிர்பார்ப்பு குறையவில்லை. அந்த வகையில் இந்தாண்டு எந்த அணி ஐபிஎல் தொடரை கைப்பற்றும் என்று பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜோதிடர்களின் கணிப்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலில், இந்தாண்டு நடக்கும் 10 வது ஐபிஎல் தொடரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் லயன்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகள் கைப்பற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது.

மேலும் இந்தாண்டு டெல்லி அணி மற்ற அணிகளுக்கு கடும் சவால் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கணிப்பு ஒவ்வொரு அணியின் தலைவர்களின் ஜாதக நிலையை வைத்து கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி திடீரென்று அணியில் தலைவர்கள் மாறினால், இந்த கணிப்புகளும் மாறும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த முறை கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப் மற்றும் ரைசிங் புனே வாரியர்ஸ் போன்ற அணிகள் இந்தாண்டு நடக்கும் 10 வது ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றுதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments